Skip to main content

ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் திமுக ஆட்சியில் வேலைவாய்ப்பை கொடுத்துள்ளோம் - ஐபி பேச்சு

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
ip

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் உள்ள இளைஞரணி பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சியில் வசிக்கும் தி.மு.க. இளைஞரணிக்கான அடையாள அட்டை வழங்கும் விழா செம்பட்டியில் உள்ள சவரிமுத்துப்பிள்ளை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஆத்தூர் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினருமான இ.பெரியசாமி தலைமை தாங்கினார். ஆத்தூர் கிழக்கு  ஒன்றிய தி.மு.க. செயலாளர் பிள்ளையார்நத்தம் முருகேசன், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாறைப்பட்டி சி.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் செட்டியபட்டி ராஜா வரவேற்று பேசினார். 

 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இ.பெரியசாமி தி.மு.க. இளைஞரணியினருக்கு அடையாள அட்டை வழங்கிவிட்டு பேசும்போது...  தமிழகத்தில் எடப்பாடியின் காட்டாட்சி நடைபெறுகிறது. இந்த கஜா புயல் சேதத்திற்கு கூட முறையான நிவாரணம் வழங்காததால் பல கிராமங்களில் ஏழை விவசாயிகள் பசியோடும், பட்டினியோடும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நிவாரணம் கொடுக்க செல்லும் இடமெல்லாம் அ.தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க.வினரை பொதுமக்கள் விரட்டியடிப்பது தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இன்று இந்த விழாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தி.மு.க. இளைஞரணியில் சேருகிறார்கள் என்றால் அவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கை கிடைப்பதோடு அரசு பணியும் கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளார்கள்.


 சாதாரண சத்துணவு வேலைக்கு கூட 4லட்சம் முதல் 5லட்சம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இன்று உள்ளது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாமல் வேலைவாய்ப்பை கொடுத்துள்ளோம். வருகின்ற இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அடையாளம் காட்டும் நபரே இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள் என்ற போது இளைஞர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் எழுந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் சேதமடைந்த விளைநிலங்களால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்த பொதுமக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

 ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் வசிக்கும்  4100 இளைஞர்களுக்கு தி.மு.க. இளைஞரணியினருக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் தண்டபாணி, மார்கிரேட் மேரி, ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மேற்கு ஒன்றிய செயலாளர் சி.ராமன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் கு.சத்தியமூர்த்தி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கும்மம்பட்டி விவேகானந்தன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பார்த்தசாரதி,பிலால்உசேன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மருதாம்பாள் ஆல்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், அய்யம்பாளைம் ரமேஷ், நெல்லூர் மலைச்சாமி, கலைச்செல்வி முருகன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் செட்டியபட்டி டி.ராஜா, ஆத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மணலூர் மணிகண்டன் மற்றும் 22 கிராம ஊராட்சிகள், 2 பேரூராட்சிகளை சேர்ந்த தி.மு.க. இளைஞரணியினர் மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் 4100 இளைஞர்களுக்கு தி.மு.க. இளைஞரணிக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இளைஞர்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்தது!

 

சார்ந்த செய்திகள்