
திருச்சி மாவட்ட தொழில் வளா்ச்சித்துறை அலுவலகத்தில் தொழில் துவங்க விரும்புவோர் அரசு வழங்கக் கூடிய கடன் தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. தொழில் துவங்க விருப்பம் உள்ளவா்கள் தங்களுடைய தொழில் குறித்தான தகவல்களை திரட்டி அதனை துவங்குவதற்கான முதலீடு உள்ளிட்டவைகளை ஆவணங்களாக கொடுத்தால் தொழில்துறை மேலாளா் மூலம் அது அங்கீகரிக்கப்படும்.
தற்போது தொழில் வளா்ச்சித்துறை திருச்சி மேலாளராக ரவீந்திரகுமார் பொறுப்பு வகித்து வருகிறார். 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தொழில் துவங்க விண்ணப்பம் செய்தால் 5 லட்சம் லஞ்சமாக கொடுப்பதாக இவர் மீது புகார் எழுந்தது. இதேபோல், தொடர்ந்து பல புகார்கள் எழுந்ததால், இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினா் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கணக்கில் காட்டப்படாத 3 லட்சம் ரூபாய் மேலாளா் ரவீந்திரகுமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீடு மற்றும் உறவினா்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினா் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனா்.