Skip to main content

பத்திரிக்கையாளரின் டூவீலரை பஞ்சராக்கிய போலீஸ்காரர்! 

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

 

policeman who punctured a journalist's two-wheeler

சிவகாசியில் ரயில்வே மேம்பாலத்துக்கான ராட்சத இரும்புக் கர்டர்கள்  பொருத்தும் பணி நடக்கிறது. தனியார் சேனல் ஒன்றின் விருதுநகர் மாவட்ட  ஒளிப்பதிவாளரான குமார்,  கவரேஜுக்காக அங்கு தனது டூவீலரில் சென்றார்.  அப்போது அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த சிவகாசி காவல்நிலைய  எஸ்.எஸ்.ஐ. ஆறுமுகம்,  “டூவீலரை உள்ளே கொண்டு போகக்கூடாது..”  என்று கூறியிருக்கிறார். 

சேனல் ஒளிப்பதிவாளர் குமாரோ  “சார்.. ஏற்கனவே  ரொம்ப லேட்டாயிருச்சு.. வீடியோ எடுத்துட்டு கொஞ்ச நேரத்துல  வந்துருவேன்.. என்னை பிரஸ் போட்டோகிராபர்னு உங்களுக்கு நல்லா  தெரியும்ல..” எனச் சொல்லிவிட்டு வேகமாக ஸ்பாட்டுக்கு கிளம்ப,  “நான்  சொல்லச் சொல்ல கேட்க மாட்டேங்கிறீங்க.. பார்த்துக்கிறேன்..” என்று  எரிச்சலுடன் பேசியிருக்கிறார் எஸ்.எஸ்.ஐ. ஆறுமுகம்.    கவரேஜை முடித்துவிட்டு டூவீலரை குமார் எடுத்தபோது முன் வீல் டயர்  பஞ்சராகி இருந்தது.  ‘அட, கொடுமையே.. இப்படி பண்ணிட்டாங்களே..’ என்று  வேதனையுடன் ஒரு கி.மீ. தூரம் டூவீலரை உருட்டிக்கொண்டே சென்றுள்ளார். பஞ்சர் ஒட்டுபவர் “யாரோ டியூப் வால்வுல எதையோ வச்சு குத்தி காற்றை  பிடுங்கி விட்ருக்காங்க.” என்று விளக்கியிருக்கிறார்.

பஞ்சர் ஒட்டியதும் டூவீலரில் அங்குபோன குமார்,  எஸ்.எஸ்.ஐ.  ஆறுமுகத்திடம்  “சார்.. டூவீலர்ல யாரோ காற்றை பிடுங்கிவிட்டு பஞ்சர்  ஆக்கிருக்காங்க..” என்று கூற,  “எனக்கு எதுவும் தெரியாது..” எனச் சொல்லிவிட்டு, கெட்ட வார்த்தைகளில் காற்றைப் பிடுங்கிய நபரை  திட்டுவதுபோல் திட்டியிருக்கிறார். நம்மிடம் குமார் “சந்தேகமே இல்ல.. என் மனசுக்குக்கு நல்லா படுது.  இதப்  பண்ணுனது அந்த எஸ்.எஸ்.ஐ.தான்.. ஆனா,  அவரு எப்படி ஒத்துக்குவாரு?”  என்று கூற, நாம் எஸ்.எஸ்.ஐ. ஆறுமுகத்திடம் பேசினோம்.  “என்னையா  பஞ்சர் பண்ணுன்னேன்னு சந்தேகப்படுறாரு? ரொம்ப சந்தோஷம்..  சூப்பர்..  எனக்கு ரெண்டு புள்ளைங்க இருக்கு.. வெளங்கணும்.. அப்படி ஒரு ஈனப்  பொழப்பு பொழைக்கிற ஆளு நான் இல்ல. அவரு வண்டி பக்கத்துலயே நான்  போகல.. நான் அப்படி பண்ணுற ஆளு கிடையாது.” என்று மறுத்தவர்,   சம்பந்தமே இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உதிர்த்தார்.

செய்தியாளர் வைத்திலிங்கம்  “எஸ்.எஸ்.ஐ. ஆறுமுகம் எந்த நேரமும் (தடை  செய்யப்பட்ட) கணேஷ் புகையிலை இல்லாம இருக்கமாட்டார். காய்கறி  மார்கெட்ல அவர பத்தி விசாரிச்சு பாருங்க. ரொம்ப மெச்சுவாங்க. ஒருதடவை  என்கிட்ட,  நான் பார்க்கிற பத்திரிக்கைப் பணியை அருவருப்பான வார்த்தையைச் சொல்லி கேவலமா பேச, நான் நொந்துபோயிட்டேன். அவரு  என்னைக்கு பிரஸ்ஸ மதிச்சாரு?” என்றார் ஆதங்கத்துடன்.   

சார்ந்த செய்திகள்