Skip to main content

முத்துமனோ குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி!

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

prioner incident cbcid investigation chief minister mkstalin announced the funds

பாளையங்கோட்டை சிறையில் நிகழ்ந்த மோதலில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (01/07/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி 2 கிராமம், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாவநாசம் என்பவரின் மகன் முத்துமனோ (வயது 27) என்பவர் 22/04/2021 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். இந்நிகழ்வு தொடர்பாக பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவத்தில் உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்தினரின் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேற்படி, சம்பவத்திற்கு காரணமான பாளையங்கோட்டை சிறைச்சாலைப் பணியாளர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போழுது வழக்கானது குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (சி.பி.சி.ஐ.டி.)  மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்