Published on 12/08/2021 | Edited on 12/08/2021
கேரளாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தேனி மாவட்டம் போடிமெட்டிலிருந்து கேரளா செல்லும் கூலித் தொழிலாளர்களிடம் கரோனா சான்றிதழ், தடுப்பூசி சான்றிதழ் கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடிமெட்டு வழியாக ஏராளமான விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலைக்காக தினமும் கேரளா செல்லும் நிலையில், இன்று (12.08.2021) காலை போடிமெட்டு சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் கேரளாவிற்குச் செல்லும் வாகனங்களை சோதனையிட்டு ஆர்டிபிசிஆர், இ-பாஸ், இரண்டு தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்று போன்றவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயக் கூலித் தொழிலாளர்களும் ஜீப் ஓட்டுநர்களும் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.