Skip to main content

ஆங்கிலத்தில் அர்ச்சனை சீட்டு; கொதித்தெழுந்த இளைஞர்கள்; தமிழுக்கு மாற்றிய அறநிலையத்துறை

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

Ordination ticket in English.. Youths are angry.. Charity department changed to Tamil..

 

தமிழ்நாட்டில் வழக்காடு மொழியாக தமிழே இருக்க வேண்டும். கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் இந்தியும் ஆங்கிலமும் நுழைக்கப்படுகிறது அதனை மாற்ற வேண்டும் என்ற குரல் அதிகமாகவே உள்ளது.

 

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பெரிய கோயில் என்று பக்தர்களால் அழைக்கப்படும் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் மாசிமகத் திருவிழாவில் கடந்த 2 நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். ஆசியாவில் உயரமான 35 அடி உயர குதிரை சிலைக்கு வரலாறு காணாத வகையில் 2750 மாலைகள் பக்தர்களால் காணிக்கையாக அணிவிக்கப்பட்டுள்ளது.

 

Ordination ticket in English.. Youths are angry.. Charity department changed to Tamil..

 

அதே போல பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யனாருக்கு அர்ச்சனை செய்துள்ளனர். அர்ச்சனைக்கு அறநிலையத்துறை சார்பில் ரூ.10 வசூலிக்கப்படுகிறது. வசூல் செய்யும் தொகைக்கு ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட ரசீதுகள் வழங்கப்பட்டன. இதனைப் பார்த்த இளைஞர்கள் அய்யனார் கோயில் அர்ச்சனைச் சீட்டில் ஆங்கிலமா? தமிழில் அர்ச்சனை சீட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் பதிவு செய்தனர். ஏராளமான இளைஞர்கள் போர்க்குரல் எழுப்பிய நிலையில் உடனடியாக ஆங்கிலத்தில் இருந்த அர்ச்சனைச் சீட்டை தமிழில் மாற்றி வழங்கி வருகின்றனர்.

 

Ordination ticket in English.. Youths are angry.. Charity department changed to Tamil..

 

இளைஞர்களின் கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்திய அறநிலையத்துறைக்கு இளைஞர்கள் நன்றி கூறியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.