Skip to main content

தொகுதி மக்களிடம் குறைகளை கேட்ட ஓபிஎஸ்!

Published on 05/08/2018 | Edited on 06/08/2018
sd


துணை முதல்வர் ஒபிஎஸ் தொகுதியான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரண்மனை புதூர் ஊராட்சிக்கு உட்டபட்ட அரண்மனைப்புதூர் உள்பட சில கிராமங்களில் உள்ள பொதுமக்களை ஒபிஎஸ் நேரடியாக சந்தித்து குறைகளையும் கோரிக்கை மனுக்களையும் கேட்டு வாங்கி அதை உடனடியாக நிறைவேற்றிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இப்படி பொதுமக்கள் கொடுத்த கோரிக்கையில் பல கிராமத்தின் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின் வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், வீட்டுமனைப் பட்டாக்கள், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, அம்மா இரு சக்கர வாகனம், மாதாந்திர உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து நிவாரணம் உதவித்தொகை, நலிந்தோர் உதவித்தொகை, புதிய தொழில் தொடங்கிட கடனுதவி, விவசாய கடனுதவி போன்ற பல்வேறு கோரிக்கை வேண்டி துணை முதல்வர் ஒபிஎஸ்சிடம் பொதுமக்கள் மனு கொடுத்தும் இருக்கிறார்கள்.
 

ops


இப்படி பல்வேறு மனுக்களை பெற்று கொண்ட துணை முதலமைச்சர் பெறப்பட்ட மனுக்கள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தகுதி வாய்நத மனுதாரர்களுக்கு அரசின் பயன் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உடன் வந்த அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தொகுதி மக்கள் மத்தியில் பேசிய துணை முதல்வர் ஒபிஎஸ்சோ... மாவட்டத்தில் முதல் கட்டமாக 130. ஊராட்சிகளிலும் வாரம் தோறும் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகள் நிவர்த்தி செய்யப்படும். தொடர்ந்து பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு முழு முயற்சியுடன் குறைகள் தீர்க்கப்படும். பி.டி.ஆர். கால்வாய், 18ம் கால்வாய் செப்டம்பர் 15ம்தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

கொட்டக்குடி ஆறு, வீரபாண்டி, ரயில்வே லைன் ஆகிய இடங்களில் வசிப்பகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 2400 வீடுகள் கட்டி தர 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அம்மா ஆட்சியில் தான் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. புதிதாக கட்டப்படும் கட்டிங்களுக்கு மழைநீர் சேகரிப்பு அமைத்தால் தான் கட்டிட அனுமதி வாங்கப்படுகிறது. முறையாக வீடு கட்டுபவர்கள் மாவட்ட ஆட்சியரை அணுகி விண்ணப்பித்தால் ஆற்று மணல் பெற அனுமதி தரப்படும். மதுரை முதல் ஆண்டிப்பட்டி வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
 

op


ஆண்டிப்பட்டி முதல் போடி வரை பாதை அமைத்திட டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கவுள்ளது. இப்போது உள்ள விதிகளின் படி புதிய வழியில் ரயில் பாதை அமைக்க வேண்டுமானால் 50 சதவீதம் மாநில அரசு நிதி ஒதுக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தான் இருந்து வருகிறேன் என்று கூறினார். இப்படி திடீரென தொகுதிக்கு விசிட் அடித்து மக்களின் குறைகளையும். கோரிக்கைகளையும் ஒபிஎஸ் கேட்டதை கண்டு தொகுதி மக்கள் பூரித்து போய்விட்டார்கள்.

சார்ந்த செய்திகள்