Published on 23/06/2019 | Edited on 23/06/2019

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 834 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான டி.ஆர்.பி., ஆன்லைன் தேர்வு இன்று நடக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்கு அருகே நெல்லை மாவட்டத்தில் உள்ள லெவிஞ்சிபுரம் கேப் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கும் தேர்வில் கம்ப்யூட்டர்கள் செயல்படவில்லை. ஆன்லைன் குளறுபடி என்கிறார்கள். இதனால் தேர்வு எழுத முடியாமல் 50 க்கும் மேற்பட்டோர் பரிதவிப்பில் உள்ளனர். இதுகுறித்து சென்னை டிஆர்பி அலுவலகத்தை தொடர்பு கொண்டாலும் பதில் இல்லை.