Published on 01/01/2025 | Edited on 01/01/2025
உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர், ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். ரஜினிகாந்த் திடகாத்திரமாக ஆரோக்கியத்துடன் உள்ளார். அரசியல் எதுவும் பேசவில்லை. அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு உள்ளேன். வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது அரசின் கடமை” எனத் தெரிவித்தார்.