Skip to main content

அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை... அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதம்!

Published on 16/03/2020 | Edited on 16/03/2020

நாகர்கோவில் வடசரி பரதர் தெருவில் 1994- ஆம் ஆண்டு எம்ஜிஆரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு அது அந்தப் பகுதி அதிமுகவினரால் பராமரிக்கபட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென்று அந்த எம்ஜிஆர் சிலை அருகில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை வைத்து மாலை அணிவித்து இருந்தனர். இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்களுக்கு இச்சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது காட்டுத்தீ போல் நாகர்கோவில் நகரம் முமுவதும் பரவியது.

nagar koil jayalalitha statue nagar koil admk and govt offivers

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை வருவாய் அதிகாரிகளிடமிருந்து முறைப்படி அனுமதி பெறாமல் வைத்ததால், காவல் துறையினருடன் வந்த ஆர்டிஓ அதிகாரி மயில், தாசில்தாா் அப்துல் மன்னா, மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்து சிலையை அப்புறபடுத்த அதிமுக பொறுப்பாளர் சகாயராஜிடம் கூறினார்கள். அதற்கு சகாயராஜ் முடியவே முடியாது எம்ஜிஆர் சிலைக்கு அனுமதி வாங்கிய இடத்தில் தான் ஜெயலலிதா சிலை வைத்து இருக்கிறோம். வேறு இடத்தில் வைத்து இருந்தால் தான் அனுமதி வாங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்கு வாதம் செய்தார்.
 

ஆனால் அதிகாரிகளோ அனுமதி வாங்காமல் வைக்கபட்டிருக்கும் சிலையை அப்புறப்படுத்தியே தான் தீர வேண்டும். அது யாருடைய சிலையாக இருந்தாலும் எனக் கூறி சிலையை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். 

nagar koil jayalalitha statue nagar koil admk and govt offivers

அப்போது அங்கு வந்த அதிமுக மாவட்டச் செயலாளர் அசோகன், ஜெயலலிதா சிலைக்கு மாலை போட்டு விட்டு சிலையை மாற்றினால் அதிகாரிகளும் உடனே மாற்றப்படுவார்கள். எங்க ஆட்சியில் எங்க தலைவியின் சிலையை வைக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்றார். ஆனாலும் அதைப் பொருட்படுத்தாத அதிகாரிகள் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நீங்க சிலை வைக்க முறைப்படி அனுமதி கேளுங்கள் அதற்கு அனுமதி தருகிறோம். அதன் பிறகு சிலை வையுங்கள் எனக் கூறி சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

உடனே அதிமுகவினா் நாங்களே அந்தச் சிலையை வைத்திருக்கிறோம் எனக் கூறி சிலையை வாங்கி சென்றனா். அப்போது அதிமுகவினர் ஜெயலலிதா சிலையைத் தூக்கி வீசியது போல் அந்த அதிகாாிகளையும் சீக்கிரமாக தூக்கி வீசுவோம் என ஆவேசத்துடன் கூறினார்கள். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கனல் கண்ணனால் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு; வாக்குவாதத்தில் இந்து முன்னணி

Published on 10/07/2023 | Edited on 10/07/2023

 

Kanal Kannan in nagarkovil S.P. office;

 

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக இருப்பவர் கனல் கண்ணன். இவர் இந்து முன்னணி அமைப்பில் செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிநாட்டு கிறிஸ்தவ மதபோதகர் குறித்து அவதூறு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதனுடன் சில கருத்துகளையும் பதிவிட்டிருந்தார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஜோசப் பெனடிக் என்பவர் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், கனல் கண்ணன் கிறிஸ்துவ மதத்தை அவமதித்தாகக் கூறியிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் கனல் கண்ணன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்திற்கு கனல் கண்ணன் விசாரணைக்காக வந்திருந்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே கனல் கண்ணன் எஸ்.பி அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல முயன்றார். அவரைத் தடுத்த காவல்துறையினர், விசாரணை முடியும் வரை எங்கும் செல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.

 

அப்போது, எஸ்.பி அலுவலகத்தின் வெளியே இருந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனல் கண்ணன் தனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், விசாரணை முடியும் முன் வெளியே செல்ல அனுமதி கிடையாது என கண்டிப்பு காட்டிய காவல்துறை, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. 

 

 

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.