pon

Advertisment

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுடப்பட்டதற்கு சமூக விரோதிகளை கேள்விகேட்காத திமுகவே காரணம் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

இன்று கன்னியாகுமரி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

தூத்துக்குடியில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பே காரணம். அமைதியாக நடந்த போராட்டத்தில்ஒரு பகுதி மக்களை திசை திருப்பி கொலைக்களமாக மாற்றிய அந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருங்காலத்தில் இன்னும் நிறைய தூத்துக்குடி சம்பவங்களைபோன்ற பல தூத்துக்குடி சம்பவங்கள்உருவாக இதுவேகாரணமாக இருந்துவிடும்.

மக்கள் அதிகாரம் அமைப்பு மட்டுமல்ல மக்கள் போராட்டத்தை திசை திருப்பிய அனைத்து அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அமைப்புகள் மட்டுமல்ல, அந்த சமூக விரோதிகளை எதிர்த்து கேள்விகேட்காத திமுகவும்தான் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் நடந்த13 பேர் கொலைக்கு காரணம் எனக்கூறினார்.