மதுரையில் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுத்த கும்பல் சுங்க கட்டணம் செலுத்தக் கோரிய சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டும் வகையில் துப்பாக்கியால்வானை நோக்கி சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

மதுரை கப்பலூரில் சுங்கச்சாவடிக்கு சொகுசு காரில் வந்த கும்பல் ஒன்று சுங்கக்கட்டணம் செலுத்த மறுத்த நிலையில், இதுகுறித்து ஊழியர்கள் கேள்வி எழுப்ப ஏற்பட்ட மோதலில் காரில் வந்த நபர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி சுட்டார். இதனால்அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

Advertisment

துப்பாக்கியால் சுட்ட நபரை அங்கிருந்த ஊழியர்கள் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த திருமங்கலம் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் உடன் வந்த நபர்கள்காரில் தப்பி சென்றதாககூறப்படுகிறது. பிடிபட்ட அந்தநபர் திருச்சியை சேர்ந்த சசிக்குமார்என்று தெரியவந்துள்ளது.

அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் அந்த காரில் இருந்த பதிவு எண் குழப்பமூட்டும் வகையில் இருந்தது. இந்த சம்பவம் குறித்து மற்ற சுங்கச்சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தப்பி சென்றவர்களை போலீசார் கைது செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.