Skip to main content

நாம் தமிழர் ஒற்றைக்கால் போராட்டம்! 

Published on 13/02/2019 | Edited on 13/02/2019


 

naam tamizhar


 

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அனைத்து துறைகளிலும் முக்கிய நகரமாக விளங்கி வருகிறது.  தமிழகத்தில் உள்ள ஒரே பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் பீங்கான் தொழில் நுட்ப கல்லூரி,  கேரளா மற்றும் தென் மாவட்டங்களை சென்னையோடு இணக்கும் முக்கிய ரயில்வே நிலைய சந்திப்பு, நான்கு மாவட்ட  விவசாயிகள் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் பெரிய அளவிலான ஒழுங்குமுறை விற்பனை கூடம், முந்திரி, வேர்க்கடலைகளுக்கான வேளாண் ஆராய்ச்சி நிலையம், மின் துறை, கல்வி துறை என மாவட்ட அளவிலான பல்வேறு துறை அலுவலகங்கள் விருத்தாசலத்தில் உள்ளன.
 

எனவே அனைத்து தகுதிகளும் உள்ளதாலும்,  மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளான வேப்பூர், சிறுபாக்கம், மங்களூர், தொழுதூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை போன்ற பகுதிகளிலிருந்து மாவட்ட தலைநகரான கடலூர் செல்ல அதிக நேரம் கடக்க வேண்டியுள்ளதாலும்,  இப்பகுதிகளின் மையப்பகுதியாக உள்ள விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.   
 

மேலும் விருத்தாலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்  அறிவிக்க  கோரியும், விருத்தாசலம் கோட்டத்தில் இருந்து எந்த ஒரு பகுதியையும் பிரிக்கவோ, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் சேர்க்கவோ கூடாது என வலியுறுத்தியும் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகள்,  பொதுநல அமைப்புகள் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக முஸ்லிம் சமுதாய முன்னேற்ற சேவை மையத்தின் சார்பில் பாலக்கரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒற்றைக்காலில் நின்று மாவட்டம் கோரம் நூதன போராட்டமும் நடைபெற்றது. இப்போராட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சியினர்,  சமூக ஆர்வலர்கள்,  பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருத்தாசலம் மாவட்டம் அமைக்கும் வரை தொடர் போராட்டங்கள் நடைபெறும் எனவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்