
கரூரில் தன்னை மிரட்டி, அறுவடைக்கு தயாராக இருந்த வயலில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்ததாக பெண் ஒருவர் கதறிகளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வீடியோவில், 'சார் வயல் எல்லாம் போச்சு சார். டவர் போடுவதற்கு இடம் கொடுத்தா அந்த வயல் முழுவதும் கொடுத்துவிட வேண்டுமா? எந்த ரூல்ஸ்ல அப்படி இருக்கிறது சார்? டவர் போடுகின்ற இடம் மட்டும் தானே பர்மிஷன், அடுத்த டவர் போடுவதற்கு என் நிலம்தான் கிடைத்ததா? அடுத்த டவர் போட வேண்டும் என்றால் எவ்வளவு ரூல்ஸ் இருக்கு. அந்த வயலை அழிக்க முடியுமா? என்னிடம் பர்மிஷன் கேட்டார்களா? என்னிடம் பர்மிஷன் கேட்கவே இல்லை. கேட்டால் என்னை மிரட்டுறார்கள் சார். அந்த ஏ.டி சொல்கிறார் அப்படித்தான் போடுவோம் உன்னால் என்ன முடியுமோ பாரு என என்னை மிரட்டுகிறார் சார்'' என அப்பெண் அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
குற்றச்சாட்டு குறித்து கேள்விக்கு பதிலளித்த அதிகாரி ஒருவர், 'நஷ்ட ஈடு அறிவித்து நாங்கள் டவர் போட்டு விட்டோம். அதை டேமேஜ் செய்கிறீர்கள்'' என்றார். அதற்கு 'சார் எல்லாத்துக்கும் தீர்வு நஷ்ட ஈடு நஷ்ட ஈடு என சொல்லாதீங்க சார். யார் டேமேஜ் செய்தது அவர்களிடம் கேளுங்கள் சார். டவர் போட்டதே தப்பு என்று சொல்கிறோம். ஆனால் நீங்கள் டேமேஜ் பண்ணனினோம் சொல்லுகிறீர்கள்' என்றனர்.
அதற்கு பதிலளித்த அதிகாரி 'இந்த விஷயம் எங்களிடம் இல்லை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். நீங்க அவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள்'' என்றார்.