
ஒவ்வொரு நாளும் புதுப்புதுக் கோணத்தில் சிந்தித்து, தன்னை வெளிப்படுத்துபவராக இருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. சென்னையை நேசிப்பதாகச் சொல்லும் அவர், திரையில் காட்டுவதற்கு என் உடல் தயாராகி வருகிறது என, அதிரடியாக இன்று ட்வீட் செய்திருக்கிறார். நான்கு மாதங்களுக்கு முன் ஹைதராபாத் நடிகர் சங்க அலுவலகம் எதிரே அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியவர் அல்லவா? துணிந்து எதுவும் செய்வார்! விசித்திரமான நடவடிக்கைகள், இவரை எங்கே கொண்டுபோய் விடுமோ? ஸ்ரீரெட்டிக்கே வெளிச்சம்!

ஸ்ரீரெட்டியின் ட்வீட் மொழியை நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றுடல் என்று சொல்லவில்லையே! முழுமூச்சாகப் பயிற்சிகளில் ஈடுபட்டு, உடையுடன் உடலைச் சிக்கென்று காட்டுவதற்குத் தயாராகி வருவதைத்தான், அவருடைய ஸ்டைலில் சொல்லியிருக்கிறார் ஸ்ரீரெட்டி என்று விளக்கம் தருகிறார்கள்.
அட போங்கப்பா! தன் டைரியைப் புரட்டிக்கொண்டேதான் இருக்கிறார் ஸ்ரீரெட்டி. புதிது புதிதாய்ப் பூதங்களும் கிளம்பியவாறே உள்ளன.