Skip to main content

தமிழகத்தில் உயருகிறதா பால் விலை?

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று மீன்வளம், பால்வளம், கால்நடைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்துவருகிறது.

இந்த கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கேபிபி.சாமி பேசும்பொழுது, கடந்த சில ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையயை தமிழக அரசு உயர்த்தாமல் இருக்கிறது. அதை உயர்த்த தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்து வருகிறதா என கேள்வி எழுப்பினார்.

 Milk prices rising in Tamil Nadu?


அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பால் உற்பத்தியாளர்களை பொறுத்தவரை கொள்முதல் விலை என்பது பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. கொள்முதல் விலையை உயர்த்தினால் நுகர்வோருக்கும் பால்விலை உயர்த்த நேரிடும். பால் கொள்முதல் விலையை உயர்த்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சம்மதம் தெரிவிக்கவேண்டும். அப்படி சம்மதம் தெரிவித்தால்  இந்த கூட்ட தொடர் முடிவதற்குள் அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கும் என்ற விஷயத்தை முதல்வர் பதிவு செய்துள்ளார். 

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சம்மதம் தெரிவித்து இந்த கூட்டத்தொடரில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை அரசு உயர்த்தினால் கண்டிப்பாக தமிழகத்தில் பால் விலை அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.

 

 

சார்ந்த செய்திகள்