வேலூரில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்குச் சேகரித்தார். அப்போது அவரை செய்தியாளர்கள் சந்தித்தபோது, பாடப் புத்தகத்தில் தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்தது குறித்த கேள்விக்கு, புதிய பாடத்திட்ட புத்தகங்களில் இதுவரை கூறப்பட்ட 19 தவறுகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால் உடனடியாக திருத்தம் செய்யப்படும்.
உருது மொழி பாடப்புத்தகங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. உருது மொழியிலும் சிறுபான்மையின மக்கள் அவரவர் மொழிகளிலும் தேர்வு எழுத வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது’’என்று கூறினார்.
அவர் மேலும், வேலூர் தொகுதியில் தேர்தல் கள நிலவர குறித்த கேள்விக்கு, வேலூரில் 30 அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் திமுக சார்பில் 30 முன்னாள் அமைச்சர்கள் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.