Skip to main content

'பெண்கள் பாதுகாப்பிற்கு அரணாக இருப்போம்'-  வேலு நாச்சியார் படத்திற்கு விஜய் மரியாதை

Published on 03/01/2025 | Edited on 03/01/2025
'Let's be a bulwark for women's safety'- Vijay respects Velu Nachiyar

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டின் போது கொள்கை தலைவர்களாக வேலு நாச்சியார், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோரை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வேலுநாச்சியார் பிறந்த நாளான இன்று வேலு நாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி நடிகர் விஜய்  எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், 'ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்