Skip to main content

’ரோசம், மானம் இருந்தால் செய்யட்டும்’ - எடப்பாடிக்கு கமல்ஹாசன் சவால்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
m

 

மக்கள் நீதி மய்யம் கட்சி்யின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த இரண்டு நாட்கள் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.   அதில் இன்று மேட்டூர் கெங்கவல்லி மற்றும் அயோத்தியா பட்டினம்,  ஆத்தூர் போன்ற இடங்களில் அவரது பயணத்தில் பேசுகையில்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெயர் குறிப்பிடாமல் சில கருத்துகளை தெரிவித்தார்.    எடப்பாடி அருகே உள்ளது கொங்கனாபுரம்.

 

k4

   

அந்த இடத்தில் பேசியபோது,   நான் இன்று மதியம் மேட்டூர் அணையை பார்வையிட்டு வந்தேன்.   இந்த பகுதிக்கு வரும்போது மக்கள் என்னிடம் கூறியது மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைப்பதாக கூறினார்கள்.   இந்த பகுதியில் உள்ள காவிரி ஆறு கடல் போல் காட்சி அளிப்பதை கண்டு வந்தேன்.    ஆனால் மக்களுக்கு குடிநீர் பஞ்சம்.    இதை யார் சரி செய்வது.    நீங்கள் சரி செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.    அது தவறில்லை.  ஆனால்,  இந்த ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளை விரைவுபடுத்தி மக்களுக்கு தேவையான குடிநீர் கொடுத்திருக்கலாம்.    அவர்கள் செய்யவில்லை.    ரோசம், மானம் இருந்தால் அவர்கள் செய்யட்டும்.   நாம்தான் செய்ய வேண்டும் என்றால் நாம் செய்வோம் எனக்கூறியவர்,

 

mm

 

தொடர்ந்து பல ஊர்களில் பேசும்போது புரட்சி புரட்சி என்று பேசினால் மட்டும் போதாது.   அந்த புரட்சியை கையில் எடுக்கும் உரிமை மக்களாகிய உங்களிடம் உள்ளது.   ஓட்டுக்காக பணம் வாங்கும் ஒரு சமூக அவலம் நடைபெற்று வருகிறது.  அந்தப்பணம் உங்கள் பையில் இருந்து எடுத்து உங்களுக்கு தேவையான சொர்ப பணத்தை கொடுத்துவிட்டு மீது அவர்கள் பையில் வைத்துக்கொள்கிறார்கள்.   இது கூடாது.  நீங்கள் எல்லோரும் முடிவெடுத்தால் நமக்கான ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தலாம் எனக்கூறினார்.

 

சார்ந்த செய்திகள்