Skip to main content

கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

dmk

 

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 80. கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன்.

 

தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்தராக பணியாற்றி வந்த சண்முகநாதனை 1967-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தனது உதவியாளராக கலைஞர் அழைத்துக்கொண்டார். சண்முகநாதனின் தந்தை மறைந்தபோது இடுகாடு வரை நடந்தே சென்று அஞ்சலி செலுத்தி தனது உதவியாளரை அவரது ஊரார், உறவினர்கள் முன்னிலையில் பெருமைப்படுத்தியுள்ளார் கலைஞர். அரசியல் வட்டாரத்தில் கலைஞரின் நிழல் என்று அழைக்கப்பட்டவர் சண்முகநாதன். வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் காலமானார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதல்வரின் கடிதம்; கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகப்படுத்தி மத்திய அரசு பதில்

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
nn

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து தாயகம் அழைத்தவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்று முறை கடிதம்  எழுதி இருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கடிதத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், '1974ம் வருடம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையேயான ஒரு ஒப்பந்தத்தின் (கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறைமுகமாக குறிப்பிட்டு) அடிப்படையில் மீனவர் பிரச்சனை ஆரம்பமானது. அன்றிலிருந்து எப்போதெல்லாம் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்களோ அப்போதெல்லாம் மத்திய அரசின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இந்திய மீனவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மீனவர்களின் நலன் காப்பதில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகபட்ச முன்னுரிமை தருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது' எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

தமிழக அரசைக் கண்டித்து அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்! (படங்கள்)

Published on 27/06/2024 | Edited on 27/06/2024

 

தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் போது கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக நேற்றும் (26.06.2024) அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் எனச் சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல்  அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதனைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகினறனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.  இந்த போராட்டத்திற்கு தேமுதிகாவும் ஆதரவளித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததுடன், போராட்டத்திலும் கலந்துகொண்டார்.

படங்கள் - எஸ்.பி.சுந்தர்