Skip to main content

கலைஞர் நினைவஞ்சலி கூட்டம் : முன்னாள் நீதிபதிகள் பங்கேற்பு

Published on 01/09/2018 | Edited on 01/09/2018
kalaignar


 

 

திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் சென்னை பெரியார் திடலில் கலைஞருக்கு நினைவஞ்சலி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்றது.  திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலைஞரின் உருவப்படத்தை சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.மோகன் திறந்துவைத்தார்.

சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வி.ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசும்போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதிகள் கே.சாமித்துரை, ஏ.கே.ராஜன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

 

 

கூட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்ததும் மேடைக்கு சென்று கலைஞரின் புகழ் குறித்து பேசிய ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தார். முடிவில், திராவிடர் கழக சட்டத்துறை தலைவர் வீரசேகரன் நன்றி கூறினார்.
 

சார்ந்த செய்திகள்