Skip to main content

அதிமுகவை விமர்சிக்க பாமகவுக்கு தகுதியில்லை - ஜெயக்குமார் காட்டம்!

Published on 15/09/2021 | Edited on 15/09/2021
jeyakumar

 

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் (15.09.2021) வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ளது. 

 

இந்நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை, இடங்கள் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தரப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் கூட்டணியில் இதுவரை இருந்துவந்த பாமக நேற்று விலகியது. கட்சியின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியன் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பாமக நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி சேர்ந்து எப்படி வெற்றிவெற முடியும் என்று கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுகவின் உட்கட்சி விவகாரம் குறித்து பேச யாருக்கும் தகுதியில்லை. தனித்துப் போட்டியிடுவதால் பாமகவுக்குத்தான் இழப்பு. அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்