இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின் நிறம் மாறிக்கொண்டிருக்கிறார். பாஜகவுடன் ஸ்டாலின் பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மைதான். பாஜக வெற்றி பெறும் என்று தெரிந்து பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார். மோடியுடனும் தொடர்பில் இருக்கிறார்’’ என்று பேட்டி அளித்திருந்தார்.
தமிழிசையின் இந்த கருத்து பெரும் சர்ச்சையைஏற்படுத்த இதனையடுத்து, தமிழிசை சவுந்திரராஜனோ அல்லது நரேந்திர மோடியோ “மத்தியில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க நான் அவர்களுடன் பேசி வருகிறேன்” என்பதை நிரூபித்து விட்டால் அரசியலில் இருந்து விலக நான் தயார்; நிரூபிக்கத் தவறினால் அவர்கள் இருவரும் அரசியலை விட்டு நீங்கள் விலகத் தயாரா?" என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில்,கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை,

தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் திமுக பேசியது என நான் கூறியது உண்மைதான். இந்த கருத்தை பாஜகவுடன் திமுக பேசியதாக எனக்கு வந்த தகவலின் அடிப்படையில் கூறினேன். நான் சொல்வதில் எப்போதுமே உண்மை இல்லாமல் இருக்காது.
திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் அதிகநாட்கள் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. நான் கூறியது உண்மையா இல்லையா என்பதை ஸ்டாலின் நிரூபிக்கட்டும். இதை எப்போது வேண்டுமானாலும் நிரூபிப்பேன். அரசியலில் எந்த நேரத்தில் நிரூபிக்க வேண்டுமோ அப்போது நிரூபிப்பேன். என்னை அரசியலை விட்டு விலக சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. ஸ்டாலின் சொல்கிறார் என்பதற்காக இன்றைக்கே நிரூபிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. பொய் சொல்லாத, ஊழல் செய்யாத,நேர்மையான அரசியலே எனது அரசியல் பாரம்பரியம். என்னுடைய அரசியல் வாழ்கை என்றும் நேர்மையானது தான் எனக்கூறினார்.