Skip to main content

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311ஐ நிறைவேற்றக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

 

 

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ஐ நிறைவேற்றக் கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் அரசுக்கு நினைவூட்டல் போராட்டம் நடத்தபோட்டது.

 

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட், "2009 க்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் சக இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் பாதியாக குறைக்கப்பட்டது. 01-06-2009 க்கு முன்னர் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 8370 என்றும், அதற்குப் பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 5200 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டதால் 3170 ரூபாய் குறைவு ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் நாங்கள் 25 ஆயிரம் இழந்து தகுதிக்கேற்ற வேலை இல்லாமல் மிகுந்த சிரமங்களுக்கும் வறுமைக்கும் உள்ளாகியிருக்கிறோம்.

 

இதனை வலியுறுத்தி எட்டு ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கை நியாயமானது என்று ஆதரவு கொடுத்திருந்தார். அதன்படியே தேர்தல் வாக்குறுதி எண் 311இல் சம வேலைக்கு சம ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதியும் கொடுத்தார். அதனை விரைந்து நிறைவேற்றக் கோரியே இந்த நினைவூட்டல் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இது அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக செயற்குழு கூட்டம் நடத்தி முடிவெடுப்போம்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்