
புதுக்கோட்டையில் இராஜகோபாலபுரத்தில் பிரபலமான நிஜாம் பாக்கு நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள் புதுக்கோட்டை மேட்டுபட்டி, மாலையீடு உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இதன் உரிமையாளர் புதுக்கோட்டை நிஜாம் காலனியை சேர்ந்த சபியுல்லா. தி.மு.க பிரமுகர். இந்நிலையில் இவருக்கு சொந்தமான ராஜகோபாலபுரத்தில் உள்ள நிஜாம்பாக்கு நிறுவனம் மேட்டுபட்டியில் உள்ள பாக்கு கவர், கப், பேப்பர் இலை செய்யும் நிறுவனம், நிஜாம் காலனியில் இவருடைய இல்லம் மற்றும் இவரது உறவினர்கள் இல்லம் உள்ளிட்ட 4 இடங்களில் திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 குழுக்கலாக 20க்கும் மேற்பட்டோர் மதியம் முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், சோதனை முடிவிலேயே இந்த சோதனைக்கான காரணம், ஆவணங்கள் ஏதும் கைப்பற்ற பட்டதா என்பது தெரியவரும்.
இரா.பகத்சிங்.