
திருச்சி மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே 17 வயது சிறுமி ஒருவர், உறவினர் ஒருவரால் வன்கொடுமைக்கு உள்ளான நிலையில், மாணவி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருமணம் செய்துகொள்ளக்கோரி சிறுமி மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட ராம்கி என்ற நபரிடம் கூறிவந்த நிலையில், கடந்த மே 29-ஆம் தேதி சிறுமி மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் எனக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுமி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராம்கி என்ற நபர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்துள்ளார். திருச்சியில் அண்மையில் ஒன்பதாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்பொழுது மணப்பாறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தற்கொலைக்கு உள்ளாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.