Skip to main content

ஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி இளைஞர்களிடம் நகை பறிக்கும் கேரள கும்பல்! - திடுக் தகவல்கள்..!

Published on 29/06/2018 | Edited on 29/06/2018
sumes s


ஓரினச்சேர்க்கைக்கு ஆசைக்காட்டி அழைத்து இளைஞர்களிடம் நகை பறிக்கும் கேரள கும்பலை சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இளைஞர்களை கூறி வைத்து மொபைல் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து அவர்களிடம் இருந்து நகைகள், சொல்போன்களை ஒரு கும்பல் பறித்து வந்துள்ளது. சமீபத்தில் இது போன்ற சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு அதிகளவிலான புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து புகார் அளித்தவர்கள் கொடுத்த தகவல் மற்றும் ஹோட்டல்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அனைத்து ஹோட்டல்களிலும் சிக்கிய ஒரு நபரின் உருவத்தை வைத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மண்ணடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த சுமேஷ், என்பவரை கைது செய்தனர்.

 

 

அப்போது சுமேஷிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கும்பல் இளைஞர்களை கூறிவைத்து, மொபைல் ஆப் மூலம் ஓரினச்சேர்க்கைக்கு குறித்த தகவல்களை பகிர்கிறது. மொபைல் ஆப்பில் வரும் இந்த தகவலை கண்டு விருப்பம் கொள்பவர்கள் அதற்கு பதில் தெரிவிக்கும் வகையில் அந்த ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின், எந்த இடத்திற்கு வரவேண்டும் என்ற தகவல் அதில் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த ஆப்பில் வர சொல்லும் ஹோட்டல்களுக்கு நேரில் செல்லும் இளைஞர்கள் அங்கு முதலில் அறைக்குள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு வரும் இளைஞர்களிடம் நகைகள் அணிந்துள்ளனரா என்பதை முதலில் நோட்டம் விடும் அந்த கும்பல் இளைஞர்கள் நகைகள் எதுவும் அணிந்து வரவில்லை என்றால் அப்படியே திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

ஆனால் நகைகள் ஏதேனும் அணிந்து வரும் பட்சத்தில் அவர்கள் அறைக்குள் அழைக்கப்பட்டு நன்கு கவனிக்கப்படுகின்றனர். பின்னர் அவர்களுக்கு குளிர்பானம் கொடுத்து குடிக்க சொல்லுகின்றனர். இப்படி கொடுக்கும் அந்த குளிர்பானத்தை குடித்ததும் இளைஞர்கள் மயங்கி விடுகின்றனர். இதையடுத்து, இளைஞர்கள் அணிந்து வந்த நகைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு அந்த கும்பல் ஹோட்டலை விட்டு தப்பி சென்றுவிடுவார்களாம். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இந்த கும்பல் வேறு வேறு ஹோட்டலில் ரூம் புக் செய்து இடத்தை மாற்றிக்கொண்டே இருந்து வந்துள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட சுமேஷிடம் இருந்து 5 பவுன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்