Published on 22/09/2019 | Edited on 22/09/2019
உளுந்தூர்பேட்டை அருகே ஏ .குமாரமங்கலம் கிராமத்தில் இன்று மின் அதிர்ச்சியின் காரணமாக மின் கம்பத்தில் இருந்த குரங்கு மற்றும் அதன் குட்டியும் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்து கீழே விழுந்தது, அப்போது அந்த வழியாக சென்ற பள்ளி மாணவர்கள் அந்த குரங்கு மற்றும் குட்டியை மீட்டு உளுந்தூர்பேட்டை கால்நடை மருத்துவ மனையில் சேர்த்தனர். கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் தமிழ்மணி மற்றும் கால்நடை துறை திருக்கோவிலூர் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் தமிழரசு அகியோர் குளுக்கோஸ் ஏற்றி தீவிர சிகிச்சையளித்து அக்குரங்களை காப்பாற்றினார்கள்.
மயக்க நிலையில் இருந்த தாய் குரங்கை சுற்றி வந்த குட்டிக் குரங்கு பாசப்பினைபுடன் தாயை விடாமல் தாய் குரங்கு கண் விழிக்கும் வரையில் சோகத்துடன் இருந்தை மருத்துவமனையில் இருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பார்த்தனர்.