Skip to main content

நூறு நாட்கள் கழித்து கிடைத்த ஹரிணி...

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
harini


ஹரிணி என்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமி மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். தற்போது திருப்போரூரில் மீட்கப்பட்டுள்ளார்.
 

வெங்கடேசன், காளியம்மன் என்ற நாடோடி இனத் தம்பதி தங்களது இரண்டு வயது குழந்தை ஹரிணியை காஞ்சிபுரம் மானாமதியிலுள்ள அணைக்கட்டு காவல்நிலையம் அருகே தொலைத்துவிட்டனர். காணாமல் போன குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று அங்கேயே இருந்தனர். காஞ்சிபுரம் காவல்துறை, மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தது.
 

அக்குழந்தையின் தாய் ஒன்பது மாத கர்ப்பிணி குழந்தை காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சீரியஸான நிலைக்கு சென்றுதால். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 

பின்னர், இந்த செய்தியை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தினார்.தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், மும்பையில் ஹரிணி போன்று ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. 
 

இந்நிலையில், சிறுமி ஹரிணி 100 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளார். லதா ரஜினிகாந்த் பார்த்ததாகக் கூறிய நிலையில், திருப்போரூரில் சிறுமி ஹரிணி இன்று மீட்கப்பட்டுள்ளார். திருப்போரூர் போலீஸார் நாடோடி தம்பதியிடம் ஹரிணியை ஒப்படைக்க உள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாயமான குழந்தையை மீட்டுக் கொடுத்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

police for rescue the missing child

 

மருத்துவமனையில் தாயிடம் இருந்து மாயமான முதல் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொடுத்த காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

 

கோவை மாவட்டம் சங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். 24 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு சித்தார்த் என்கிற 4 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று ருக்மணி தனது இரண்டாவது பிரசவத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவரது மூத்த மகன் சித்தார்த்தும் உடனிருந்தார்.

 

இதையடுத்து மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ருக்மணிக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த சமயம், குழந்தை பிறந்த செய்தியறிந்த பெற்றோரும் உறவினர்களும் மகிழ்ச்சியில் திளைத்த நேரத்தில் மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மூத்த மகன் சித்தார்த் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தன்னுடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு மகன் சித்தார்த்தை மருத்துவமனை முழுவதுமாக தேடி அலைந்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த முதல்நிலை காவலர் ஸ்ரீதர் என்பவர் மெயின்ரோட்டில் நின்று கொண்டிருந்த சித்தார்த்திடம் பேச்சு கொடுத்துள்ளார். 

 

இதைத் தொடர்ந்து, அந்த சிறுவன் தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொள்ளாததால் அச்சிறுவனுக்கு உணவுப்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, மகப்பேறு வார்டில் இருந்த தனது தாயை அடையாளம் காட்டிய பிறகு அச்சிறுவன் மணிகண்டன் - ருக்மணி தம்பதியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாயமான சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த காவலரை மருத்துவமனையில் இருந்த அனைவரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு போலீசார் அங்கிருந்தவர்களிடமும் அறிவுறுத்திவிட்டுச் சென்றுள்ளார்.

 

 

 

Next Story

காட்டுக்குள் தொலைந்த சிறுவனை காப்பாற்றி பாதுகாத்த கரடி...

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

hjnghj

 

அமெரிக்கவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் தொலைந்துள்ளான். ஜீரோ டிகிரிக்கு கீழ் உறைநிலையில் வெப்பநிலை இருந்ததால் அந்த சிறுவனை தேட முடியாமல் பெற்றோரும், மீட்பு படை வீரர்களும் தடுமாறினர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பின் அந்த சிறுவனை கண்டுபிடித்து மீட்டது மீட்பு படை. அப்பொழுது அந்த சிறுவன் காட்டிலிருந்த தனது இரண்டு நாள் அனுபவங்களை பகிர்த்துள்ளான். அதன்படி காணாமல் போன சிறுவன் காட்டில் வழி தெரியாமல் தவித்த போது, அங்கு வந்த ஒரு கரடி நட்புடன் பழகியதாகவும், கடந்த இரண்டு நாட்களாக தனக்கு பாதுகாப்பாக இருந்து உணவு தேடவும் உதவி செய்ததாக கூறினான். இரண்டு நாள் கரடியின் துணையுடன் இருந்த அந்த சிறுவன் மீட்கப்பட்டு தற்போது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.