Skip to main content

கட்டுப்படுத்தலாம்; ஒழுங்குபடுத்தலாம்; தடை செய்யக்கூடாது!  - மத வழிபாடு உரிமை குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

மத ரீதியான நிகழ்வுகளைத் தடை செய்ய அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பெரம்பலூர் மாவட்டம் நாரயணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வரதராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தங்கள் ஊரில் விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன் என்ற மூன்று கோவில்கள் உள்ளதாகவும், இந்தக் கோவில்களை பிற்படுத்தப்பட்ட மக்கள் நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 200 ஆண்டுகளாக கோவில் திருவிழா மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது என்றும், ஊரின் அனைத்து தெருக்கள் வழியாக தேர் இழுத்து வழிபாடு நடத்துவது வழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Government to ban religious events  The authorities have no authority high court order


இந்நிலையில் கடந்த 2007- ஆம் ஆண்டு தேர்த் திருவிழாவில் முதல் மரியாதை செய்வது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தேர் பவனி நிறுத்தப்பட்டது. அந்தத் தேரை  இழுத்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வருவாய் வட்டார அலுவலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண உத்தரவிட்டார்.  


பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மத ரீதியான நிகழ்வுகளின்போது வழிபாடு செய்ய அனைவருக்கும் உரிமை உள்ளது. வழிபாடு நிகழ்வுகளின் போது  பிரச்சனை ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்த, ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. வழிபாட்டைத் தடை செய்ய அதிகாரம் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் அந்த ஊர் மக்களுடன் பேசி தேர்த்திருவிழாவை நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.