
'பெண் பிள்ளைகளுக்கு கல்வி தான் சொத்து. உயர்கல்வி வரை கற்க வைக்க வேண்டும்' என பெற்றோர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி
கோரிக்கை விடுத்ததோடு, ஆத்தூர் தொகுதியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவியை
பாராட்டி வாழ்த்தினார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆத்தூர் தொகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கியதோடு பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கைக்காக கோரிக்கை மனு கொடுத்ததற்கு உடனடியாக தீர்வு வழங்கியதோடு உயர் கல்வி கற்க வேண்டுமென வாழ்த்தினார்.
அப்போது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு ஊராட்சியைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர் விஜயகுமாரின் மகள் சின்னாளபட்டியில் உள்ள சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500 க்கு 491 மதிப்பெண்கள் பெற்று ஆத்தூர் தொகுதியில் உள்ள பள்ளிகளில் முதலிடம் பெற்றார். அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற வந்த சசிரேகாவை அமைச்சர் ஐ.பெரியசாமி பாராட்டி வாழ்த்தியதோடு, பெண்கள் தான் சாதனை படைத்து வருகின்றனர். பெற்றோர்கள் பெண் பிள்ளைகள் உயர்கல்வி கற்க வைக்க வேண்டும் என்றதோடு, பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து எனக்கூறி மாணவி சசிரேகாவை வாழ்த்தி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இன்னும் சிறப்பாக மதிப்பெண்கள் பெற வேண்டும்' என்று கூறினார்.