Published on 15/04/2022 | Edited on 15/04/2022

தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கப்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வங்கக் கடலில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. இதனால் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. வங்கக்கடலில் மீன் இனப்பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படும் நிலையில் இந்த முறையும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.