பிரேசிலில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்து இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கடலூரை பூர்வீகமாக கொண்ட வீராங்கனை இளவேனில் வாலறிவன்.
இவர் கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் பகுதியில் பிறந்த இளவேனில் என்ற 19 வயதுடைய கல்லூரி மாணவி தற்போது குஜராத்தில் தாய் தந்தையுடன் மணி நகரில் வசித்து வருகிறார். இவர் துப்பாக்கி சூடும் போட்டியில் பிரேசில் நாட்டில் தங்க பதக்கம் பெற்றதையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய வீராங்கனை இளவேனில் தாத்தா உருத்திராபதியும், பாட்டி கிருஷ்ணவேணியும். "துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த இளவேனில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே தங்கள் ஆசை" என்று கூறுகின்றனர்
தமிழ்நாட்டுக்கும், கடலூருக்கும் பெருமை சேர்த்த இளவேனில் வாலறிவனை கடலூர் மக்கள் பெருமையோடு வாழ்த்துகின்றனர்.