Published on 25/01/2019 | Edited on 25/01/2019
கடலூரில் அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, தொழுதூர், மங்களூர் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் முழுமையாக சேதமடைந்துள்ளது. அதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடும், நிவாரணமும் வழங்க கோரி இன்று கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.