சென்னையில் ஸ்பைடர் மேன் உடையுடன் அலப்பறையில் ஈடுபட்ட நபரை போலீசார் எச்சரித்த செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை அண்ணா சாலையில் திடீரென கட்டிடத்தின் மீது ஸ்பைடர் மேன் உடையுடன் ஏறிய நபர் ஒருவர் சாகசங்களில் ஈடுபட்டார். சாலையில் சென்றவர்கள் பரபரப்பாக கூடி நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் டென்ஷன் ஆன பொதுமக்கள் இது குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்தனர்.
உடனடியாக அங்கு வந்த போலீசார் ஸ்பைடர் மேன் உடையில் சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த நபரை கீழே இறக்கினர். மாஸ்கை கழற்றும்படி கூறியும் கடைசி வரை அந்த நபர் மாஸ்கை அகற்றவில்லை. ஒரு கட்டத்தில் போலீசார் கடிந்துகொண்டதின் பேரில் அந்த நபர் மாஸ்கை கழட்டினார். போலீசார் நடத்திய விசாரணையில் சையத் அக்பர் அலி என்ற அந்த நபர் ஹோட்டல் வளாகத்தில் ஸ்வீட் கடை நடத்தி வருபவர் என்பது தெரிந்தது. கடை விளம்பரத்திற்காக ஸ்பைடர் மேன் உடையில் கட்டிடத்தின் மீது ஏறி கவனத்தை ஈர்க்க இப்படி செய்ததாக கூறினார். பின்னர் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.