Skip to main content

பாலியல் வன்கொடுமை: இரண்டு வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பு!

Published on 11/09/2022 | Edited on 11/09/2022

 

DINDIGUL DISTRICT MAHILA COURT JUDGEMENT POCSO ACT

திண்டுக்கல் மாவட்டத்தில் இருவேறு போக்ஸோ வழக்குகளில் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு 44 ஆண்டு மற்றும் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. 

 

கடந்த 2019- ஆம் ஆண்டில் 11- ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்று மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பிரசாத் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதேபோல், மற்றொரு 11- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை வன்கொடுமை செய்ததாக மாசித்துரை என்பவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 

 

இந்த இரண்டு வழக்குகள் மீதான அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பிரசாத்துக்கு 47 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 50,000 அபராதமும், மாசித்துரைக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பென்சில் வாங்க வந்த சிறுமிக்கு சேர்ந்த கொடூரம்; மளிகைக் கடை முதியவருக்கு சிறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Cruelty meted out to a girl who came to buy a pencil; Jail for grocery shop old man

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மாஸ்கோ நகரைச் சேர்ந்தவர் 62 வயதான சிவா. இவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வைத்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் சிவாவின் கடைக்கு சென்று பென்சில் வாங்கியுள்ளார். அப்பொழுது சிறுமியை அழைத்துச் சென்ற சிவா அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது குறித்து அச்சிறுமி அவரின் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிவா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.