மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா. கல்லூரி படிப்பை முடிந்த இவர், பலசரக்கு கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜெயசூர்யாவும், அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால், இந்த காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மாணவியை அவரது தாய் மாமனுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் ஜோடி இருவரும் ஜெயசூர்யாவின் கடையில் சந்தித்து கொண்டனர். அப்போது, பெற்றோர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொல்ல முயன்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இருவரும் விஷம் அருந்தி கடையில் மயங்கி கிடந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இளைஞரும், கல்லூரி மாணவியும் விஷம் அருந்தி தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.