Skip to main content

தொடர் கனமழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Continuous heavy rain Holiday notification for schools

 

தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (25.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோன்று கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (25.11.2023) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிப்பு மாவட்ட கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் நடிகர் சரத்குமார் தரிசனம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  உள்ளது. இங்கு தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்தின் மலர்களைப் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால நூல்கள் சிறப்பாக தெரிவிக்கின்றன. இது சித்திரை மாதம் மட்டுமே மலரும் தன்மையுடையது. இந்த மரத்தின் அருகில் புராண காலத்தில் முருகப்பெருமான் பகீரத மன்னனுக்கு காட்சியருளி அவனுக்கு மீண்டும் அரசாட்சியை வழங்கியதாக இத்திருக்கோயிலின் தல வரலாறு கூறுகிறது. அதனால் இங்கு வந்து வணங்குவோருக்கு உயர்ந்த பதவிகள், வளமான செல்வங்கள், சொந்த வீடு ஆகியன கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த திருக்கோயிலுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். மேலும் சினிமா நடிகர்கள் உள்ளிட்ட கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் வந்து வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டு புகழடைகின்றனர். அந்த வகையில், நேற்று (28-04-24) ஞாயிறு விடுமுறை நாளையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதற்கொண்டே திருக்கோயிலுக்கு வந்து வரிசையில் நின்றனர். காலை 6 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் உற்சவருக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கருவறையில் உள்ள மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு பலவித மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

உற்சவர் முருகப்பெருமானும் சிறப்பு அலங்காரத்தில் சஷ்டி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியருளினார். இதனிடையே, காலையில் நடிகர் சரத்குமார் வருகைதந்து முருகப்பெருமானை பக்தியுடன் வணங்கினார். முருகப்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தரிசித்தார். பின்னர், ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், வஸ்திரம், மாலைகள், முருகன் படம் ஆகியன வழங்கப்பட்டன.

Actor Sarathkumar Darshan at Vallakottai Murugan Temple

விடுமுறை நாளையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வல்லக்கோட்டை முருகப்பெருமானை வழிபட்டனர். திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம், மோர், குடிநீர் ஆகியவற்றை இணை ஆணையர இரா.வான்மதி, உதவி ஆணையர் பொ.லட்சுமிகாந்த பாரதிதாசன் ஆகியோர் அறிவுரையின் பேரில் திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் வழங்கினார்.

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.