Published on 21/12/2019 | Edited on 21/12/2019

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குடியுரிமை சட்டத்திற்கு பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொண்டு வர திட்டமிடுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதால் நாட்டின் பாரம்பரியத்தை அழிக்க அதிகாரமில்லை. இதுப்போன்ற கொடுங்கோன்மை அடங்கும் வரை எனது போராட்டம் ஓயாது. ஆவணங்கள் அடிப்படையில் ஒருவரின் முன்னோரை நிர்ணயம் செய்வதோ அவர்களை நீக்குவதோ தவறானது'. இவ்வாறு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.