Skip to main content

''முதல்வர் நீண்ட காலம் வாழ்ந்து திமுக ஆட்சியை பார்க்கவேண்டும்''-ஸ்டாலின் பேச்சு

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

'' The chief minister must live long '' - Stalin's speech

 

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனு தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

 

கடந்த 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''''பல பொதுக்கூட்டங்களில் பேசிவருவதால் தொண்டை சரியில்லை. திமுகவை வீழ்த்த வேண்டுமென்றால் என் உயிரைக் கொடுக்கவும் தயார்'' எனப் பேசியிருந்தார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கேயத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகையில், ''திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவார்களே தவிர திமுகவை அழிக்க முடியாது. அண்ணா காலம் முதலே திமுகவை அழிக்கப் போகிறோம் என பலர் கூறுகின்றனர்.  திமுகவை வீழ்த்த உயிரைக் கொடுக்கத் தயார் என தேர்தலுக்கு முன்பே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார். திமுவை வீழ்த்த நீங்கள் உயிரை தர வேண்டாம். நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து திமுக ஆட்சியை பார்க்கவேண்டும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

லண்டன் சென்று வந்த மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chief minister discussion with students who visited London

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டனுக்குச் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பிய மாணவர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பள்ளிக் கல்வி முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பைத் தொடர்வதற்கான 'நான் முதல்வன்' திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்  முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 25 பேர் கடந்த வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக லண்டன் சென்றிருந்தனர். இரண்டு வார பயிற்சிக்குப் பின் சென்னை திரும்பி நிலையில் இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாணவ  மாணவியர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.  

Next Story

'இன்றே எழுதி வைத்துவிடலாம்; அந்தக் கதிதான் அதிமுகவுக்கு' - கி.வீரமணி விமர்சனம்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 14 ஆம் தேதி (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில், “ஏற்கெனவே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிடை இழந்தது. தேர்தல் ஆணையம் இருக்கும்போது இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக பயப்படுவது ஏன்? இடைத்தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் கலாச்சாரத்தை கொண்டு வந்ததே அதிமுகதான். 1992-இல் பரங்கிமலை கண்டோன்மெண்ட் தேர்தலில் முதன் முறையாக வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் முறையை அறிமுகப்படுத்தியதும் அதிமுக தான்'' எனக் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார்.

இந்நிலையில் பாஜகவிற்கு உதவுவதற்காகவே அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பதாக திராவிடர் கழகம் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதிமுக இடைத்தேர்தலில் புறக்கணித்திருப்பது என்பது மறைமுகமாக பாஜகவை ஆதரிப்பதே ஆகும். இது அதிமுக கட்சியின் பலகீனத்துக்கான அறிகுறியே. அரசியல் கட்சியின் கடமையை நிறைவேற்றுவதில் இருந்து அதிமுக பின்வாங்குவது உள்நோக்கம் கொண்ட செயலாக இருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பால் அதிமுகவின் பொதுமதிப்பு காணாமல் போய்விடும். இது அக்கட்சிக்கான தோல்வி அச்சத்தை காட்டுகிறது. தொண்டர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், வாக்காளர்கள் மத்தியில் அதிமுகவுக்கு இருப்பதாக கூறப்படும் பொதுமதிப்பு இழக்கும் நிலை உருவாகும்.

 'Let's write it down today; That's the fate of AIADMK'- K. Veeramani review

தேர்தலில் நிற்பதில்லை என்ற முடிவுக்கு அதிமுக சொல்லும் காரணங்கள் பொது அறிவு பொருத்தமானதாக இல்லை. ஆம்புலன்ஸை பணம் கடத்த பயன்படுத்தியவர்கள் அதிமுகவினர் என்பதை நாடறியும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்து இருந்தாலும் பிரச்சாரத்தில் மோடியை அதிமுக தலைவர்கள் விமர்சிக்கவில்லை. மராட்டியத்தில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான் அதிமுகவிற்கும் ஏற்படும் என்பதை இன்றே எழுதி வைத்துவிடலாம். பாஜக கூட்டணியில் சேர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாமக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பாமக மீது தமிழ்நாட்டு மக்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்? பாமகவின் எந்தப் பிரச்சாரமும் இனி எடுபடாது. விக்கிரவாண்டி தேர்தலில் திமுக ஆட்சியின் மக்கள் வளர்ச்சி திட்டங்கள் அமோக வெற்றியைப் பெற்று தரும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.