Published on 25/12/2019 | Edited on 25/12/2019
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் விலங்குகளை தத்ரூபமாக பார்க்க புதிய ஷோ தொடங்கப்பட்டுள்ளது. "Augmented Reality Show" என்ற புனை மெய்யாக தொழில் நுட்ப காட்சியை பார்க்க சிறுவருக்கு ரூபாய் 15, பெரியவருக்கு ரூபாய் 50 கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பூங்காவில் ரூபாய் 40 லட்சத்தில் புதியதாக அனிமேஷன் ஷோ உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 10 அற்புதமான விலங்குகளை தத்ரூபமாக பார்க்கும் வகையில் அனிமேஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சிறுவர்களுக்கு ரூபாய் 5, பெரியவர்களுக்கு ரூபாய் 20 என்ற நுழைவுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இலலை. அனிமேஷன் ஷோவை பார்க்க விரும்புவோர் மட்டும் நுழைவுக் கட்டணத்துடன் புதிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.