காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் குளித்தலையில் பொதுமக்கள்-மக்கள் இயக்கங்கள் - அரசியல்கட்சிகள் இணைந்து மண்டபத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆலோசனை நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கே.சி.ஆர் . சண்முகம் அவர்கள் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ராஜேசு கண்ணன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
நடைபெற்ற கூட்டத்தில் முதலில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன் அவர்கள் காவிரி பாதுகாப்பு உறுதிமொழியை வாசித்தார். எனது உயிரினும் மேலான அன்னை காவிரியை அழியாமல் தடுக்க தொடர்ந்து போராடுவோம்!
காவிரியை காக்க போராடுபவர்களுக்கு எப்போதும் துணை நிற்ப்போம் என உறுதி ஏற்போம்!! உறுதி ! உறுதி!! உறுதி !!! " எனக் கூற , தோழர் முகிலன் கூறியதை கூட்டத்தில் பங்கேற்ற 400 பேர் அனைவரும் உறுதிமொழியை திரும்பக் கூறினார். அதன் பின்பு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன் அவர்கள் குளித்தலையில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் சுயாட்சி இயக்கத்தை சேர்ந்த கிறிஸ்டினா சாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ம.பா.சின்னத்துரை, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சிவசூரியன், ம.தி.மு.க டி.டி சி.சேகரன், சி.பி.ஐ எம்.எஸ்.மகாலிங்கம், சி.பி .எம்.. ராஜு, நாம் தமிழர் கட்சி. இளஞ்செழியன்- சீனி பிரகாசு , விடுதலை சிறுத்தைகள் .முசிறி கலைச்செல்வன், மனத்தட்டை தி.மு.க பொன்னர், மனித நேய மக்கள் கட்சி அயூப்கான், எஸ் .டி .பி .ஐ . அப்துல் அஜீஸ் , சாமானிய மக்கள் நலக் கட்சி முனைவர் .குணசேகரன், காவிரி மீட்பு குழு. வெங்கடேசன், பெல் தொழிலாளர் சங்கம் குளித்தலை சீதாராமன், வழக்கறிஞர் திருமலைராஜா, குளித்தலை இயற்கை பாதுகாப்பு இயக்கம் சுதர்சன்-பி .எஸ்.வி.ராஜகோபால்-எஸ்.என்.எஸ்.ராஜுக்குமார், குளித்தலை நகர்நல சங்கம் தோழர். கார்த்திகேயன், குளித்தலை மாற்றம் அமைப்பு தோழர். அருண் முத்துவேல், குளித்தலை மாணவர் -இளைஞர் கூட்டமைப்பு தோழர். பிரபு -பூமிநாதன், சென்னை இயற்கை செயற்பாட்டாளர் தோழர்.ஜீவானந்தம், தண்ணீர் அமைப்பு வினோத், மே 17 இயக்கம் திலீபன், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர். சத்தியசீலன், பெரியார் திராவிடர் கழகம் தோழர்.தனபால், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஆசிரியர் ராமசாமி, சட்ட செயற்பாட்டாளர் தோழர். வாசுதேவன், முசிறி பசுமை சிகரம் தோழர்.விதை லோகநாதன், பாசன விவசாயிகள் சங்கம் தோழர்.அன்பு செழியன், ஆதி தமிழர் பேரவை தோழர்.மோகன்குமார், குளித்தலை மூத்த சமூக செயற்பாட்டாளர் தோழர்.கோபால் தேசிகன், கபிலர்மலை சரசுவதி காகித ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு தோழர்.பொன்னரசு,
மதுரை ஏழு தமிழர் விடுதலை கூட்டமைப்பு தோழர் .காந்தி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க வாங்கல் விசுவநாதன், கரூர் முரளி, குளித்தலை ம.தி மு.க . தோழர். எம்.ஆர்.டி.ரவிக்குமார், குளித்தலை வாழைக்காய் வியாபாரிகள் சங்கம் தோழர் .சேட்டு, ஆட்டோ தொழிலார் சங்கம் தோழர் ஆரோக்கியசாமி, மக்கள் பாதை தோழர்.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தோழர்.ராஜேசுவரி, கரூர் சதீசு ஆகியோர் காவிரியை காக்கும் எழுச்சி பாடல்களை பாடினர். கலந்தாய்வு கூட்டத்தை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் ராஜேசுவரி தொகுத்து வழங்கினார். 12 .08 .2017 -இல் மணத்தட்டை மணல் குவாரியை மூடக் கோரி குளித்தலை சுங்க கேட்டில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான 56 பேர்களுக்கும் துணிப்பை வழங்கி நல்லக்கண்ணு சிறப்பு செய்தார்.
கடந்த மாதம் 12 .09 .2018 மணத்தட்டை மணல் குவாரியை மூடக் கோரி முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான 14 பேர்களுக்கும் அய்யா நல்லக்கண்ணு நூல்கள் வழங்கி சிறப்பு செய்தார். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன், விடுதலை போராட்ட வீரரும் , மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான அய்யா.நல்லகண்ணு ஆகியோர் எழுச்சிமிக்க சிறப்புரை ஆற்றினார்கள்.
குளித்தலை கண்ணன் திருமண மண்டபத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விவாதித்து இறுதியாக நிறைவேற்றப்பட்ட கூட்ட தீர்மானங்கள்:
சட்டவிரோத மணத்தட்டை மணல் குவா ரியை உடனே மூட வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் குளித்தலை-ராஜேந்திரம் அரசு மணல்கிடங்கை உடனே மூட வேண்டும்.
மணல்குவாரியை மூடாவிட்டால் முதல்கட்டமாக இம்மாத(நவம்பர்) இறுதி வாரத்தில் குளித்தலையில் ஒருநாள் கடை அடைப்பு நடத்தப்படும். மனத்தட்டை மணல்குவாரியை மூடாவிட்டால், புதிதாக மணல்குவாரிக்கு அனுமதி கொடுத்தாலோ, இரண்டாம் கட்டமாக ஜனவரி இறுதியில் .நல்லகண்ணு தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனைத்து அமைப்புகள் - கட்சிகள் - பொதுமக்கள் ஆகியோரை இனைத்து முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக மணல்கடத்தலில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட மணச்சநல்லூர் வட்டாட்சியர் ரேணுகா அவர்களை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவாரியை மூட கோரி நடத்தப்படும் கடை அடைப்புக்கு ஆதரவு தரக்கோரி குளித்தலையில் உள்ள கடைவீதிகளில் ஒவ்வொரு கடைகளுக்கு நோட்டிஸ் விநியோகம் செய்து ஆதரவு தெரிவித்தனர். மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் வியாபாரிகள் கடை அடைப்பு நடத்துவது குளித்தலை பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.