Skip to main content

படகில் கஞ்சா... சிக்கலில் சிக்கிய பிரபல யூடியூபர் குடும்பம்! 

Published on 27/09/2021 | Edited on 28/09/2021

 

Cannabis on the boat;  YouTuber family in trouble!

 

நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்த இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் நாகை துறைமுகம், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்துவந்தனர். அப்போது நாகை துறைமுகம் அருகே ஒரு படகில் கஞ்சா மூட்டைகளை ஏற்றிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்துள்ளனர். அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள், கஞ்சாவை படகிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

 

இதையடுத்து, படகைச் சுற்றி வளைத்த சுங்கத்துறை அதிகாரிகள் படகில் இருந்த 280 கிலோ கஞ்சா அடங்கிய 10 மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அதோடு கடத்தல்காரர்கள் விட்டுச் சென்ற 4 இருசக்கர வாகனங்கள், இரண்டு வலைகள், ஒரு ஐஸ் பெட்டி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். 

 

Cannabis on the boat;  YouTuber family in trouble!

 

கடத்தப்படவிருந்த கஞ்சா மூட்டைகளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். கஞ்சா பொட்டலங்கள் அனைத்தும் இலங்கைக்குப் படகு மூலம் கடத்தவிருந்தது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, கடல் மற்றும் கடல் சார்ந்த உணவு உள்ளிட்டவற்றை மையமாகவைத்து யூடியூப் சேனல் நடத்தும் 'நாகை மீனவன்' குடும்பத்தினருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்