கோவையில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.
கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடப்பதாக வந்ததகவலையடுத்து. கோவை கடைவீதி போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் உக்கடம், கடைவீதி, பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்ட போலீசார் அந்தபகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர்களை அழைத்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் கோவை பொம்மிசெட்டி வீதியை சேர்ந்த ஜெயபால், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரன்மஹரனா, மற்றும் அதே மாநிலத்தை சேர்ந்த பருண்டக்கு. என தெரியவருகிறது. இவர்களிடம் இருந்து 1.300 கிலோகிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்து மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தார்கள்.