Skip to main content

கஜா புயல் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் -தேனி கலெக்டர் எச்சரிக்கை!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018

தேனி மாவட்டத்தில் கஜா புயலால் மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

kaja

 

அதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பொதுமக்களுக்கு ஒருமுன் எச்சரிக்கை  அறிவிக்கை விடுத்துள்ளார். அதில் கஜா புயலை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்கம்பங்கள், மரங்கள், தற்காலிக பந்தல்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.

 

kaja

 

மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள், மாணவ, மாணவியர்கள் ஆறு, குளம் மற்றும் கண்மாய் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், வலுவில்லாத வீடுகளில் வசிப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று தங்குமாறும், ஏதேனும் அவசர உதவிகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகள் கோரலாம் என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்  தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்