Skip to main content

ஜல்லிக்கட்டை அடுத்து சி.ஏ.ஏ - தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

CAA after Jallikattai - Chief Minister's announcement at the election campaign meeting!

 

வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தமிழகத்தில் சூடு பிடித்திருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றன.

 

கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கும் சட்டத்திற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் துவங்கப்படும் பல்கலைக்கழகத்திற்கான சட்ட மசோதா உட்பட 8 முக்கிய மசோதாக்கள் வாய்மொழி வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. அதேபோல் கடந்த 5-ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தில், போராட்டத்தின்போது காவலர்களைத் தாக்கியது, வாகனங்களுக்குத் தீவைத்தது தொடர்பான வழக்குகளைத் தவிர, மற்ற வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று (19.02.2021) தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''மத்தியக் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா (சி.ஏ.ஏ)வை எதிர்த்து போராடியதற்குப் போடப்பட்ட வழக்குகளில், போலீசாரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது, வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளைத் தவிர, மற்ற 1500 வழக்குகள் வாபஸ் பெறப்படும்'' என அறிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'விக்கிரவாண்டி இடைத்தேர்தல்'-வீடியோவில் ஆதரவு கேட்ட மு.க.ஸ்டாலின்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
'Vikravandi by-election' - M.K.Stalin asked for support in the video

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சி நிர்வாகியான அன்புமணியும், நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவன் என்ற பெண் வேட்பாளரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவு கேட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அந்த வீடியோவில் வரும்,  ''விக்கிரவாண்டி மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். ஜூலை 10-ஆம் நாள் நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆற்றல் மிக்க வேட்பாளர் அன்னியூர் சிவா என்கின்ற சிவ சண்முகத்திற்கு உங்கள் உள்ளம் கவர்ந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்தியா கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுகின்ற அன்னியூர் சிவா என்கின்ற சிவசண்முகத்தை உங்களுக்கு தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மண்ணின் மைந்தர்.  மக்களோடு மக்களாக மக்கள் பணியாற்றும் மக்கள் தொண்டர் தான் அன்னியூர் சிவா. 1986 ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தடம் மாறாத, நிறம் மாறாத கலைஞரோட உடன்பிறப்புகளில் அவரும் ஒருத்தர். கலைஞருடைய பாணியில் சொல்ல வேண்டும் என்றால் தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே சிந்திக்கின்ற ரத்த நாளங்களில் ஒருத்தர்''  என தெரிவித்துள்ளார்.z

Next Story

“அரசு இயந்திரம் முழுவதும் நிர்வாகச் சீர்கேடு புரையோடிப் போயுள்ளது” - இ.பி.எஸ் கண்டனம்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
 EPS says Corrupt administration is rampant throughout the government machinery

பீகாரைச் சேர்ந்த தம்பதியர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலைக்காகச் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு 2 மகள் மற்றும் 1 மகன் இருந்தனர். 

இந்த நிலையில், தம்பதியரின் 11 வயது மகனுக்குக் கடந்த சில தினங்களாகத் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவனது உடல்நிலை மிகவும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் சிறுவனை அழைத்து சென்றபோது பாதி வழியிலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தியதில் தம்பதியர் வசிக்கும் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அதனால் அதனைக் குடித்த சிறுவன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவம் குறித்து அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கெனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த தி.மு.க அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம். 

மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படைத் தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதி செய்யமுடியவில்லை என்பது, நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாகச் சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.