nn

அண்மையில் கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 60 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் குறித்து ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்து உள்ளது.

Advertisment

இந்நிலையில் 'தமிழக அரசு சார்பாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கியது எப்படி?' என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக முகமது கோஸ் என்பவர் பொதுநலமனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கள்ளச் சாராயம் குடிப்பது என்பதே முதலில் சட்டவிரோதமான செயல். அதில் உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக்கூடாது. தீ விபத்து, பேருந்து விபத்து போன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் தான் கொடுக்கிறார்கள். ஆனால் இதற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள். இவ்வாறு சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்குவது தவறு. கள்ளச்சாராயம் அருந்துவதை இது ஊக்குவிக்கும் செயல். எனவே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என அந்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

Advertisment

Why give 10 lakhs to a counterfeiter liquor? Reconsideration required'-Supreme Court Question

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபிக் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், '10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகமான தொகை. எப்படி இவ்வளவு அதிகமான தொகையை இழப்பீடாக கொடுத்தீர்கள்' என அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினர். இந்தத்தொகையைவழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது குறித்து அரசு என்ன சொல்ல விரும்புகிறது என அறிய அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டு வழக்கு இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.