Published on 30/04/2022 | Edited on 30/04/2022

ஆம்பூரில் எருதுவிடும் விழாவில் பங்கேற்ற காளை ஒன்று 15 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆம்பூர் திருப்பத்தூரை அடுத்த சாந்தூர்குப்பம் என்ற இடத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த காளைகள் பங்கு பெற்ற நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான காளை அவிழ்த்து விடப்பட்டது. வெகு தூரம் ஓடிய அந்த காளை தண்ணீர் இல்லாத15 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்தது. காளை விழுந்தது தொடர்பாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் கயிறுகளைக் கட்டி அதன் மூலம் காளையை மீட்டனர். லேசாக காயமடைந்த காளைக்கு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.