Skip to main content

வெடிகுண்டு வீசி கொலை... 3-பேருக்கு குண்டர் சட்டம்

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரையொட்டியுள்ள அண்ணாமலைநகர்  மருத்துவகல்லூரி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த ஆகஸ்ட் 20-ந்தேதி இரவு கலுங்குமேட்டை சேர்ந்த பாண்டியராஜ்(எ) கோழிபாண்டியன் த/பெ கலியபெருமாள் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வடமூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் (27), கும்பகோணத்தை சேர்ந்த கதிரவன்(22), கடலூரை சேர்ந்த ஜெயசீலன்(22) ஆகியோர் ஹோட்டலுக்கு வந்து வெடிகுண்டு வீசியதில் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ஆய்வாளர் தேவேந்திரன் விசாரணை மேற்கொண்டனர்.

 

cuddalore

 

இந்த சம்பவத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்த மூன்று பேர் உள்ளிட்ட கலுங்குமேட்டை சேர்ந்த ராஜா, மணி, மஞ்சுளா ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சரத்குமார் மீது அண்ணாமலை நகர் , பரங்கிப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் 3 வழக்குகள் உள்ளன. கதிரவன் மீது கும்பகோணம், விழுப்புரம் நாச்சியார்கோயில்ஆகிய காவல் நிலையங்களில் கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உள்ளன. வெடிகுண்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயசீலன் ஆகிய மூன்றுபேரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்  பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில்   ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கடத்தப்பட்ட 15 வயது சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்பு

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
 Kidnapped 15-year-old girl rescued after 30 days

கீரமங்கலம் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் 15 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் ஜூன் 4 ந் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. பெற்றோர்களும் உறவினர்களும் எங்கு தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல்  நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், கொத்தக்கோட்டை அம்மயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த அரங்குளவன் மகன் காமராஜ் (வயது 24) மற்றும் அவரது நண்பன் கோவிலூர் சம்பாமனை சங்கர் மகன் முருகேசன் (23) ஆகிய இருவரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து பழுதான ஒரு மோட்டார் சைக்கிளை புதருக்குள் போட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி கொண்டு சென்றுள்ளனர் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் சிறுமியை கடத்திய வாலிபர்களின் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் செல்போன் எண்களை ஆய்வு செய்து தலைமறைவாக உள்ள சிறுமி மற்றும் 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். அவர்களது செல்போன் சிக்னல்கள் கிடைக்காமல் திணறிய போலீசார் அடுத்தடுத்த முயற்சிகள் செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமி கோவையில் இருப்பது பற்றிய தகவல் கிடைத்து காவல் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் கீரமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் கணபதி தலைமையிலான போலீசார் கோவைக்கு சென்று சிறுமி மற்றும் அவரை கடத்தி சென்ற காமராஜ் ஆகியோரை மீட்டு கீரமங்கலம் கொண்டு வந்துள்ளனர்.

15 வயது சிறுமி கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Next Story

ஹத்ராஸ் சம்பவம்; நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த ராகுல்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Hadhras Incident; Rahul went to offer condolences in person

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் கடந்த 02.07.2024 அன்று ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிழச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என  121 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் நிலையில் உத்தரப்பிரதேசம் அலிகர் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்டவர்களை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

nn

மொத்தம் 26 பேர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்கட்டமாக அலிகர் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வரும் மக்களுக்கு ராகுல்காந்தி நேரில் ஆறுதல் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தாரை சந்தித்து அனைத்து உதவிகளையும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதியை அவர் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த விவகாரத்தில் 'தேவையான நீதியும் பெற்றுத் தரப்படும். அதற்கும் தான் உறுதியுடன் இருப்பேன்' என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்ட உறவினர்களின் குடும்பத்தாருக்கு ராகுல்காந்தி கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை ராகுல் காந்தி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.