Skip to main content

கூவத்தூரில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை; மருத்துவர் இல்லாமல் செவிலியரே பிரசவம் பார்த்ததால் நேர்ந்த அதிர்ச்சி

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் செவிலியரே பிரசவம் பார்த்ததால் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

child

 

காஞ்சிபுரத்தை அடுத்த கல்பாக்கம் அருகே  கடலூர் காலனியை சேர்ந்த பொம்மி என்பவர் முதல் பிரசவத்திற்காக கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு நேற்று இரவு அழைத்துவரப்பட்டார்.

 

அதனையடுத்து நேற்று இரவே பிரசவ வலி ஏற்பட இரவு பணி மருத்துவர் இல்லாததால் செவிலியர் முத்துகுமாரியே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது சரிவர கையளாததால் குழந்தையின் தலை  துண்டிக்கப்பட்ட நிலையில் வெளியே வந்தது. இதனை அடுத்து பொம்மி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

child

 

பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் கூவத்தூர் ஆரம்ப சுகாதார  நிலையம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரசவம் பார்த்த செவிலியர் முத்துகுமாரியை கூவத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுபற்றி விசாரிக்க சென்னையை சேர்ந்த 7 பேர் கொண்ட மருத்துவ குழு புறப்பட்டுள்ளது. 

 

மருத்துவர் இல்லாமல் செவிலியரே பிரசவம் பார்த்ததால் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்த குழந்தை இறந்த சம்பவம் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்